மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வாழை ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் பெற்றது. திரை பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து தங்கள் பாராட்டுகளை இயக்குனருக்கு கொடுத்தனர்.
அதேபோல் படம் மனதை உருக வைக்கும் வகையில் இருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்தது. மாரி செல்வராஜ் சிறுவயதில் அனுபவித்த வலியும் வேதனையும் தான் இப்படம் என ஏற்கனவே கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து ஒவ்வொருவரும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்த நிலையில் இயக்குனர் பாலா மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து கண்கலங்கியதெல்லாம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சம்பவங்கள்.
இது படத்திற்கு பெரும் பிரமோஷன் ஆக அமைந்த நிலையில் வாழை வசூலிலும் சக்கை போடு போட்டது. அந்த வகையில் தற்போது ரஜினி படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பாராட்டுக்களோடு கொடுத்துள்ளார்.
அதில் வாழை படம் தமிழில் ரொம்ப நாளைக்கு பிறகு வெளிவந்த தரமான படம். மாரி செல்வராஜ் அவருடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விட்டார். அந்தப் பையன் அனுபவிக்கும் துன்பங்கள் கஷ்டங்கள் நாமே அனுபவிப்பது போல் இருக்கிறது.
இறுதி காட்சியில் பசியை தாங்காமல் சிறுவன் அலையும் போதும் அவரின் அம்மா என் பையனுக்கு ஒரு கை சோறு சாப்பிடவில்லையே என கதறும் போது நெஞ்சமெல்லாம் துடிக்கிறது. இதன் மூலம் மாரி செல்வராஜ் தலைசிறந்த இயக்குனர் என நிரூபித்து விட்டார் என பாராட்டியுள்ளார்.