ரஜினியுடன் மோத இவங்கெல்லாம் செட்டாகமாட்டாங்க என பிரபல மிரட்டல் வில்லனை புக் செய்த தயாரிப்பு நிறுவனம்..!

rajinikanth-2
rajinikanth-2

தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பொதுவாக ரஜினிகாந்த் திரைப்படம் என்றாலே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இவ்வாறு அவருடைய கதைக்காக திரைப்படம் பார்க்கிறார்களோ இல்லையோ அவருடைய ஸ்டைலுக்காக ஏங்கும் ரசிகர்கள் தமிழ்நாட்டில் ஏராளம்.

அந்த வகையில் நமது இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் ரஜினிகாந்தை வைத்து கபாலி மற்றும் காலா ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார்.இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது இந்நிலையில் இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் இணைய உள்ளதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் அறிவித்துள்ளது.

இவர் இதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தளபதி விஜய்யின் தலைவா ஆகிய தமிழ் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார். இவ்வாறு தமிழில் நடித்தது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது ரஜினிக்கு சினிமாவில் தற்போது சொல்லும்படி ஹிட்டான திரைப்படங்கள் கிடைக்கவில்லை அதனை ஈடுகட்டும் வகையில் தான் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தை  பிரம்மாண்டமாக காட்டுவதற்காக இந்த பிரம்மாண்ட வில்லனை நடிக்க வைத்துள்ளார்கள். இதன் காரணமாக இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துவிட்டது.

rajinikanth-1
rajinikanth-1