நாடி நரம்பு முறுக்க முறுக்க புல்லட்டில் கத்தியுடன் கெத்தாக வலம் வரும் ரஜினி.! வைரலாகும் அண்ணாத்த 2nd லுக் போஸ்டர்

annathe

annatha 2nd look poster : அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டவர் ரஜினி. இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இன்றுவரை குறையாமல் இருக்கிறது அதிலும் சமீபகாலமாக ரஜினி  இளமையான தோற்றத்துடன் நடித்து வருவதால்இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் பிரகாஷ்ராஜ், குஷ்பு, மீனா, சூரி என மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே நடித்து வருகிறார்கள். இந்தநிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம்  வைரலானது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வைரல் ஆனது.

annatha 3
annatha 3

அப்படி இருக்கும் நிலையில் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர் நிறுவனம் தற்பொழுது இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது இந்த போஸ்டரில் ரஜினி புல்லட்டில் கத்தியுடன் கெத்தாக வலம் வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்தால் ரசிகர்களுக்கே  நாடி நரம்பெல்லாம் முறுக்க எடுக்கும்.

அப்படி இருக்கும் வகையில் சன் பிக்சர் நிறுவனம் நாடி நரம்பு முறுக்க முறுக்க என ஒரு டைட்டிலுடன் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இதோ அந்த போஸ்டர்.

annatha 3