rajini and prakash raj baba movie incident: தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக வளர்ந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் திரை உலகில் முதன் முதலாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்றார் இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரைப் போலவே தான் நடிகர் பிரகாஷ்ராஜூம் இவரும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் அப்பா, அண்ணன், போன்ற பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.
பொதுவாக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிக சிறப்பாக நடித்து வரும் பிரகாஷ்ராஜ் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படையப்பா திரைப்படத்தில் கூட கிளைமாக்ஸ் காட்சிகள் மிக சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி இருப்பார்.
இதனைத் தொடர்ந்து பாபா திரைப்படத்தில் கூட பிரகாஷ்ராஜை நடிக்க வைத்தார் இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு அரசியல்வாதியாக நடித்து இருப்பார் ஆனால் இந்த திரைப்படம் ரஜினியின் சொந்த கதை என்பதால் சாமியார் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. இதற்கு பிரகாஷ்ராஜ் எதை வேண்டும் என்றாலும் செய்து கொள்ளுங்கள் ஆனால் என்னுடைய கேரக்டரில் முக்கியத்துவம் மட்டும் குறைந்து விடவே கூடாது என கூறியுள்ளாராம்.
பின்னர் இந்த திரைப்படத்திற்காக பிரகாஷ்ராஜுக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துள்ளார்கள் ஆனால் கதையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜுக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் இருப்பதன் காரணமாக அவர் இந்த திரைப்படத்தில் பாதி காட்சிகள் நடித்துவிட்டு பின்னர் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
இவ்வாறு நடந்த சம்பவம் ரிஜினியின் காதுக்கு செல்ல ரஜினி நம் மீதுதான் அதிக தவறு ஏனெனில் அவரை குற்றம் சொல்ல நமக்கு தகுதி கிடையாது ஆகையால் கொடுத்த அட்வான்சை திருப்பி வாங்க வேண்டாம் என ரஜினிகாந்த் கூறிவிட்டாராம்.
அதன் பிறகு சுமார் இருபது வருடங்களாக ரஜினியுடன் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நமது பிரகாஷ்ராஜ் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார் இதன் காரணமாக இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பானது மிகவும் அதிகரித்துவிட்டது.