தற்போதைய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களாக வலம் வருபவர் ரஜினி மற்றும் கமல். எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக வெற்றி படங்களை கொடுத்த ஜோடி இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது இருவரும் தனக்கென ஒரு தனி பாதையை அமைத்துக் கொண்டு இருவரும் நடித்து வெற்றி பெற்றனர் ரஜினி கடைசியாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.
கமல் விக்ரம் படத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த பல்வேறு புதிய படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர் இவர்களது இடத்தை பிடிக்க தற்போது எந்த ஒரு நடிகராலும் முடியவில்லை. ஆனால் சினிமா ஆரம்பத்திலேயே ரஜினி கமலுக்கு செம்ம பயத்தை காட்டி உள்ளார்கள் இரண்டு நடிகர்கள். அந்த இரண்டு நடிகர்கள் வேறு யாரும் அல்ல..
ராஜ்கிரன் மற்றும் ராமராஜன் தான் இருவரும் கிராமத்து கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி மேல் வெற்றியை சம்பாதித்தனார். அதிலும் குறிப்பாக ராமராஜன் தொடர்ந்து கரகாட்டக்காரன், தங்கமான ராசா, எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு என அடுத்தடுத்த வெற்றி படங்கள் தமிழ் சினிமாவில் கொடுத்து முதல் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்ற அந்தஸ்தையும் ராமராஜன் தான் பெற்றார்.
இவரை போலவே நடிகர் ராஜ்கிரனும் கிராமத்து படங்களில் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் மூலம் வெற்றியை குவித்தார் மேலும் இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் அப்பொழுது உருவாகினர். இவர்களது வளர்ச்சியை பார்த்து ரஜினி கமல் திக்கு முக்காடி போனார்கள். ஒரு சமயத்தில் ரஜினி எங்களது படம் வெளிவரப்போகிறது நீங்கள் கொஞ்சம் உங்கள் படங்களை தள்ளி வைத்துக் கொண்டால்..
எங்களது படம் ரிலீஸ் ஆகும் என கேட்கும் சூழ்நிலைக்கு எல்லாம் தள்ளப்பட்டனர். அந்த அளவிற்கு ரஜினி கமலுக்கு இணையாக ராஜ்கிரன் மற்றும் ராமராஜன் பேசப்பட்டனர் ஆனால் ஒரு கட்டத்தில் இருவர்களும் சினிமாவில் காணாமல் போனதால் சினிமா வாய்ப்பை இழந்தனர். வேறு வழியின்றி ஹீரோக்களின் படங்களில் அப்பா சித்தப்பா கதாபாத்திரங்களில் ராஜ்கிரண் நடித்தார் ராமராஜன் அரசியல் பக்கம் தாவினார்.