25 முறை நேருக்கு நேராக மோதிக்கொண்ட ரஜினி மற்றும் பாக்கியராஜ்.. களத்தில் வெற்றி பெற்றது யார் தெரியுமா.?

rajini bhagyaraj
rajini bhagyaraj

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் அதை போல் இயக்குனர் நடிகர் என பல திறமைகளை கொண்டவர் நடிகர் பாக்கியராஜ் இந்த நிலையில் இருவரும் 25 முறை நேருக்கு நேராக மோதி கொண்டார்கள் அவற்றில் யார் ஜெயித்தது என்று இங்கே காணலாம்.

1979 ஆம் ஆண்டு ரஜினிக்கு நினைத்தாலே இனிக்கும் என்ற திரைப்படம் வெளியானது. அதேபோல் பாக்கியராஜ் அவர்களுக்கு புதிய வார்ப்புகள் என்ற திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படத்திலும் ரஜினி நடித்த திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. அதேபோல் பாக்கியராஜ் திரைப்படமான புதிய வார்ப்புகள் திரைப்படமும் வெற்றி பெற்றது.

அதேபோல் 1979 அதே ஆண்டில் மீண்டும் பாக்கியராஜ் ரஜினி மோதி கொண்டார்கள். அதில் பாக்கியராஜ் நடிப்பில் வெளியாகிய கண்ணீர் பருவத்திலே திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

என் ரசிகர்கள் என்னை கைவிட மாட்டார்கள் நிரூபித்த சிவகார்த்திகேயன்.! அயலான் வசூல் எவ்வளவு தெரியுமா..?

மேலும் 1979 அதே வருடத்தில் வெளியாகிய ரஜினியின் அன்னை ஓர் ஆலயம் திரைப்படமும் பாக்கியராஜின் சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படமும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது இரண்டு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. 1980 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகிய அன்புக்கு நான் அடிமை திரைப்படமும் பாக்கியராஜின் பாமா ருக்மணி திரைப்படமும் வெளியாகிது. இதில் ரஜினி திரைப்படம் தான் மாபெரும் வெற்றி பெற்றது.

1980 ஆம் ஆண்டு ரஜினியின் காளி திரைப்படத்துடன் பாக்யராஜின் ஒரு கை ஓசை திரைப்படம் மோதியது. இதில் பாக்கியராஜ் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று ஹீட் அடித்தது. 1980 ஆம் ஆண்டு மீண்டும் ரஜினியின் பொல்லாதவன் திரைப்படத்துடன் பாக்யராஜின் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே திரைப்படம் மோதியது இதில் ரஜினியின் பொல்லாதவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

1981 ஆம் ஆண்டு ஜனவரியில் ரஜினியின் தீ திரைப்படமும் பாக்கியராஜின் மௌன கீதங்கள் திரைப்படமும் நேருக்கு நேராக மோதிக்கொண்டது இதில் பாக்கியராஜின் மௌன கீதம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 1981 ஆம் ஆண்டு மீண்டும் மார்ச்சில் பாக்யராஜின் இன்று போய் நாளை வா திரைப்படமும் ரஜினியின் கழுகு திரைப்படமும் நேருக்கு நேராக மோதிக் கொண்டது. ஆனால் இதிலும் பாக்கியராஜின் இன்று போய் நாளை வா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து மீண்டும் 1981 ஆம் ஆண்டு மே மாதத்தில் ரஜினியின் தில்லு முல்லு திரைப்படமும் பாக்யராஜின் விடியும் வரை காத்திரு என்ற திரைப்படமும் மோதிக்கொண்டது. இந்த இரண்டு திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. ஆனால் ரஜினியின் தில்லு முல்லு திரைப்படம் பாக்யராஜின் விடியும் வரை காத்திரு திரைப்படத்தை விட நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

படம் நல்லா இல்ல, நல்லா இல்ல என என்னதான் கூவுனாலும் வசூல்ல நாங்க தான் கெத்து.. இதோ கேப்டன் மில்லர் வசூல் நிலவரம்.

அதே வருடம் 1981 தீபாவளி தினத்தில் பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் திரைப்படமும் ரஜினியின் ராணுவ வீரன் திரைப்படமும் நேருக்கு நேராக மோதிக் கொண்டது இதில் பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள் மாபெரும் வெற்றி பெற்றது. 1982 ஆம் ஆண்டு ரஜினிக்கு ரங்கா திரைப்படமும் பாக்யராஜுக்கு தூரல் நின்னு போச்சு திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகி மோதிக்கொண்டது. இதில் பாக்கியராஜின் தூறல் நின்னு போச்சு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படம் 300 நாட்களைக் கடந்து மாபெரும்  சாதனை படைத்தது.

1982 ஆம் ஆண்டு ரஜினிக்கு எங்கேயோ கேட்ட குரல் திரைப்படத்துடன் பாக்கியராஜின் பொய் சாட்சி திரைப்படமும் மோதிக்கொண்டது. இதில் ரஜினி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதே வருடம் 1982 அக்டோபரில் மீண்டும் ரஜினியின் மூன்று முகம் திரைப்படமும் பாக்யராஜின் டார்லிங் டார்லிங் திரைப்படமும் மோதிக்கொண்டது. இதில் ரஜினியின் மூன்று முகம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதேபோல் 1983 ஆம் ஆண்டு பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்துடன் ரஜினியின் அடுத்த வாரிசு திரைப்படமும் மோதியது இதில் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு ரஜினிக்கு நல்லவனுக்கு நல்லவன் திரைப்படமும் பாக்யராஜுக்கு தாவணி கனவுகள் திரைப்படமும் வெளியாகிறது. இதில் இரண்டு திரைப்படமும் மாபெரும் ஹிட் அடித்தது.

இதனைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை குறிவைத்து ரஜினியின் படிக்காதவன் திரைப்படத்துடன் பாக்யராஜின் சின்னவீடு திரைப்படம் மோதியது. இதில் ரஜினியின் படிக்காதவன் திரைப்படம் பாக்கியராஜின் சின்னவீடு திரைப்படத்தை விட நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இரண்டு திரைப்படமும் வெற்றி திரைப்படம் தான். இதனை தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு மீண்டும் ரஜினியும் பாக்கியராஜூம் மோதி கொண்டார்கள். அதாவது பாக்யராஜுக்கு நம்ம ஆளு திரைப்படமும் ரஜினிக்கு தர்மத்தின் தலைவன் திரைப்படமும் ரிலீஸ் ஆகியது இதில் பாக்கியராஜ் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

இதனைத் தொடர்ந்து 1989 ஏப்ரலில் ரஜினிக்கு சிவா பாக்கியராஜ்க்கு ரத்தத்தின் ரத்தமே இந்த இரண்டு திரைப்படமும் படுதோல்வி அடைந்தது. அதேபோல் மீண்டும் 1989 அக்டோபரில் ரஜினிக்கு மாப்பிள்ளை பாக்கியராஜுக்கு ஆராரோ ஆரிராரோ இந்த இரண்டு திரைப்படத்தில் ரஜினியின் திரைப்படம் மாபெரும் வெற்றி. 1991 ஆம் ஆண்டு ரஜினியின் நாட்டுக்கு ஒரு நல்லவன் திரைப்படத்துடன் பாக்யராஜின் ருத்ரா திரைப்படம் மோதியது. இதில் பாக்கியராஜ் ருத்ரா திரைப்படம் வெற்றி பெற்றது.

இனி உன்ன அணு அணுவா சித்திரவதை செய்யப் போறேன் சொடக்கு போட்டு தமிழிடம் சவால் விட்ட மேகனா..! உச்சகட்ட பயத்தில் சரஸ்வதி..

1992 ஆம் ஆண்டு ரஜினியின் மன்னன் திரைப்படத்துடன் பாக்யராஜின் சுந்தரகாண்டம் திரைப்படம் மோதியது.இந்த இரண்டு திரைப்படமும் மாபெரும் வெற்றி. 1992 ஆம் ஆண்டு ரஜினியின் அண்ணாமலை திரைப்படத்துடன் பாக்யராஜின் அம்மா வந்தாச்சு திரைப்படம் மோதியது இதில் ரஜினியின் அண்ணாமலை திரைப்படம் மாபெரும் வெற்றி.

1992 தீபாவளி குறி வைத்து ரஜினியின் பாண்டியன் திரைப்படத்துடன் பாக்யராஜின் ராசுகுட்டி திரைப்படம் மோதியது. இதில் பாக்கியராஜ் ராசுகுட்டி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 1995 ஆம் ஆண்டு பொங்கலை குறிவைத்து ரஜினியின் பாட்ஷா திரைப்படமும் பாக்யராஜின் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி திரைப்படமும் மோதிக்கொண்டது. இதில் ரஜினியின் பாட்ஷா திரைப்படம் வெற்றி பெற்று வெள்ளி விழா கண்டது.

இப்படி ரஜினி பாக்கியராஜ் இருவரும் மாறி மாறி மோதிக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.