“அண்ணாத்த” மற்றும் ரஜினி குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்த – இயக்குனர் சிவா.! வைரல் வீடியோ இதோ.

annathaa
annathaa

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தற்போது 70 வயதைத் தாண்டி விட்டாலும் இன்னும் அவர் இளமையான ஹீரோ வாக போலவேதான் சினிமா உலகில் கொடிகட்டி பறக்கிறார் சினிமா மீது அதிகப் பற்று கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வயது முதிர்ந்தவர் ஆக இருந்தாலும் சினிமா தன்னை விட்டு விடாது என நம்பி தற்போதும் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதோடு இவரது படங்கள் ஒவ்வொன்றும் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

சமீப கால சண்டை படங்களில் நடித்து வந்த இவர் முதன் முறையாக சிறுத்தை சிவாவுடன் கைகொடுத்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் கிராமத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி போன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் இன்று தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக உள்ளது. சுமார் தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக இருக்கிறது. மேலும் வெளிநாட்டிலும் கிட்டத்தட்ட 1200 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் இதனால் டிக்கெட் புக்கிங் 10 கோடிக்கு மேல் வரும் என கூறப்படுகிறது.

முதல் நாள் மட்டுமே அண்ணாதுரை திரைப்படம் குறைந்தது 20 கோடிக்கு மேல் வசூல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி அண்ணாத்தா படத்திற்கு தற்போது எல்லாமே சாதகமாக அமைந்து உள்ளதால் ரஜினி மற்றும் படக்குழு சந்தோஷத்தில் இருக்கின்றனர். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தனது மனைவி மற்றும் பேரப் பிள்ளைகளுடன் பார்த்துவிட்டு இயக்குனர் சிறுத்தை சிவாவை கூப்பிட்டு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளாராம்.

இச்செய்தியை பகிர்ந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் 3,4 தீம் மியூசிக் இருக்கிறது அதில் ரஜினி வரும் ஒவ்வொரு சீனும் மிகப் பிரமாதமாக இருக்கும் தீம் மியூசிக் மற்றும் இசை டி இமான் அற்புதமாக பண்ணியுள்ளார் அவருக்கு எனது வாழ்த்துக்கள் மேலும் தயாரிப்பாளரும் சிறந்த பங்களிப்பை கொடுத்து படத்தை
வேற லெவலுக்கு இழுத்துச் சென்றுள்ளார் என கூறி சிறுத்தை சிவா புகழ்ந்து பேசினார்.