ஒன்றிணைந்த ரஜினி மற்றும் ஐஸ்வர்யா.! பட டைட்டில் இதுதான்..

AISHWARIYA-RAJINI
AISHWARIYA-RAJINI

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் நடிகர் சூப்பர் ஸ்டார் தற்பொழுது வயதானாலும் கூட அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் 50 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நடைபெற்றது இந்த படத்தினை நெல்சன் திலிப் குமார் இயக்கிய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக லைகா நிறுவனம் மூலம் உருவாக இருக்கும் அடுத்த இரண்டு திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது மேலும் இது குறித்து தகவல்  அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் அந்த இரண்டு திரைப்படங்களில் ஒரு படத்தினை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருப்பதாகவும் அடுத்த திரைப்படத்தினை நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்க இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தின் இயக்கி வருவதாகவும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LAAL SALAM
LAAL SALAM

இப்படிப்பட்ட நிலையில் மறைமுகமாக நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய ட்விட்டரின் மூலம் இந்த படத்தில் தான் நடித்து வருவதை உறுதி செய்து உள்ளார் இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.