தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 200 திரைப்படங்களுக்கு மேல் வெளிவந்து அசத்துகின்றன. ஆனால் டாப் நடிகர்களின் படங்கள் வருடத்திற்கு ஒரு திரைப்படம் தான் வெளிவரும் பெரும்பாலும் புதுமுக நடிகர்கள் தான் அதிக திரைப்படங்களில் நடித்து அசத்துகின்றனர்.
ஆனால் 80 90 காலகட்டங்களில் இளம் ஹீரோக்களை விட டாப் ஹீரோக்கள் தான் அதிகம் அதிலும் குறிப்பாக ரஜினி, கமல், விஜய் போன்றவர்கள் அதிக படங்களில் நடித்து அப்பொழுது தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டனர். சொல்லப்போனால் இவர்களுக்குள்ளேயே ஒரு கடுமையான போட்டி நடந்தது.
ஏன் என்றால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றிப் படங்களை ஒவ்வொருவரும் கொண்டு வந்தனர். இதனால் யார் முதலிடத்தை வசிப்பார்கள் என்பதே கணிக்க முடியாமல் இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே ஹிட் படங்களாக மாறியதால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
ஆனால் 90 காலகட்டங்களில் ஒரு வருடத்தில் அதிக திரைப்படங்களில் நடித்தவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது அந்த நடிகர்கள் லிஸ்ட்டில் ரஜினி-கமல் ஆகியோர்கள் இடம் பிடிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். 90 காலகட்டங்களில் அதிக படங்களில் நடித்து அசத்தியவர் வேறு யாருமல்ல..
நடிகர் சத்யராஜ் தான் இவர் அந்த காலகட்டத்தில் ஹீரோ வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் நடித்தவர் இதனால் 1985 -ம் வருடத்தில் மட்டுமே இவர் சுமார் 28 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி, கமல் கூட இப்படி ஒரு சாதனையை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.