தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினி அஜித் விஜய் இவர்கள் மூவரும் வருடத்திற்கு ஒரு படத்தை வெற்றி படமாக கொடுத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது நடித்துவரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்த படம் ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருகிறது. அதேபோல அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு இது அஜித்திற்கு 61வது திரைப்படம் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.
அதேசமயம் இந்த படத்தில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் அதிகம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. விஜயும் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார் அந்த படம் ஒரு குடும்ப செண்டிமென்ட் படமாக உருவாகி வருகிறதாம்.
இருப்பினும்.. இந்த படத்தில் காமெடி ஆக்சன் காதல் அனைத்தும் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மூன்று படங்களுமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் தான் உருவாகி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் தயாரிப்பாளர் கே. ராஜன் மஞ்சு குருவி என்ற படத்தின் பிரஸ்மீட்டின் பொழுது டாப் நடிகர்களை வச்சி செய்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி அஜித் விஜய் போன்ற நடிகர்கள் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் தான் நடிக்கிறார்கள். அதனால் சின்ன producer – களை மதிக்கிறது இல்லை என குற்றம் சாட்டி இருக்கிறார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது தனது கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்..