Actor Super star rajinikanth movie clash with Thala Ajith movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம்வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது சூப்பர் ஸ்டார் அவர்கள் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு போன்ற பல பிரபலங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்நிலையில் தல அஜித் அவர்கள் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இவருக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என தற்போது பேசப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டு பொங்களுக்கு வெளியாகிய ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விசுவாசம் திரைப்படமும் போட்டி போட்டு கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
அந்த வகையில் இந்த வருடமும் பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் வலிமை திரைப்படமும் மற்றும் ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும் போட்டி போடப்படும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.