நடிகர் ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம் தான் அண்ணாத்த ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து மிகவும் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடதக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்த திரைப்படம் வெளியானாலும் அந்த திரைப்படம் கண்டிப்பாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.
மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பேட்ட மற்றும் தர்பார் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு வசூல் செய்ததாக கூறப்படுகிறது ரஜினிகாந்த் இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ரஜினியுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை இணையத்தில் வைரலாகி வருகிறது ரஜினி பைக்கில் கத்தியுடன் வலம்வரும் வீடியோ காணொளி கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை வைரலாகி வருகிறது.
Thalaivar and Royal Enfield #AnnaattheFirstLook #AnnaattheMotionPoster #Annaatthe pic.twitter.com/5wHlHP0GlK
— அண்ணாத்தே (@baabakumar) September 10, 2021
இதனைத் தொடர்ந்து ரஜினியின் புதிய வீடியோ காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் அந்த வீடியோவில் ரஜினி இளம் வயதில் இருக்கும் பொழுது புல்லட்டில் கைகளை விட்டுவிட்டு கெத்தாக சிகரெட் பத்த வைக்கும் பொழுது எடுத்த வீடியோ காணொளி போல் தெரிகிறது.இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ரஜினி என்றால் மாஸ் தான் என இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.