அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி அனுமதி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வெளிவந்த அறிக்கை.!

rajini
rajini

வெள்ளித்திரையில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் ரஜினி இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் பாதிக்குப் பாதி வெற்றிகரமாக ஓடியது என்பது பலருக்கும் தெரியும் அந்த வகையில் ரஜினி சென்ற வருடம் நடித்த தர்பார் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இருந்து ஒரு பரபரப்பான தகவல் இணையதளத்தில் வெளிவந்துள்ளது ரஜினி நடித்துவரும் அண்ணாத்த திரைப்படத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ரஜினிக்கு ரத்த அழுத்தத்தால் கடுமையான ஏற்ற இறக்கங்கள் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் அதோடு ரஜினிக்கு கொரோனா நோய் தொற்றுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர் மேலும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை தற்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதை பார்த்த ஒரு சில ரசிகர்கள் ரஜினிக்கு எந்த ஒரு நோயும் வரக்கூடாது என இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

rajini
rajini