Rajini : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கும் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இந்த நிலையில் ரஜினி குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது ரஜினி நம்பர் ஒன் இடத்தை பிடிக்க பல அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்து படிப்படியாகத்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
அப்படி இவர் வளர்ந்து வரும் போது இவருடைய நண்பர்களே இவரை அவமானப்படுத்தி உள்ளார்கள் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சினிமா நேரம் போக தனது நண்பர்களுடன் ஜாலியாக ரஜினி இருப்பார் அப்படி ஒரு தடவை நெருங்கிய நண்பர்களோடு குடித்துக் கொண்டிருக்கும் போது ஜெமினி ஸ்டுடியோவிற்கு அருகே ஒரு இடம் வாங்க வேண்டுமென கூறி உள்ளார்.
அப்பொழுது அவருடைய நண்பர்கள் ஏளனமாக சிரித்து இருக்கின்றனர் அந்த கணம் ரஜினி பாட்டிலை உடைத்து சபதம் செய்துள்ளார் நான் அந்த இடத்தை வாங்கிய பின்னர் தான் மதுவை தொடுவேன் என்று சபதம் போட்டார். அன்றிலிருந்து ஒரே நாளில் மூன்று, நான்கு படங்களின் நடித்து ஓவர் டிப்ரஷன் ஆனாராம்.. காரணம் பணம் சம்பாதித்து அந்த இடத்தை வாங்க வேண்டும் என கடினமாக உழைத்தாராம்..
ஒரு வழியாக சென்னை பாம்க்ரோவ் ஹோட்டலில் அருகே அருணாச்சலாட்ஜ் என்கின்ற ஹோட்டலை சொந்தமாக வாங்கினார். இதுதான் ரஜினி சொந்தமாகிய வாங்கிய முதல் சொத்து பிறகு அந்த ஹோட்டலில் உள்ள ஒரு குட்டிச்சுவரில் பாட்டிலுடன் உட்கார்ந்து மது குடித்தாராம்..
சினிமாவில் நடிக்கும் போதே ரஜினி அதிகம் மதுபழக்கம் இருந்ததாம். இதனால் சினிமாவில் உயர உயர அதிக அளவிற்கு இவர் குடிக்கவும் ஆரம்பித்தாராம். ஒரு கட்டத்தில் இது சரி இல்லை என்பதை உணர்ந்து கொண்ட ரஜினி முற்றிலுமாக கைவிட்டாராம்..