90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்த நடிகர்கள் ஏராளம் இருப்பினும் அவர்களுக்கு இணையாக ஒரு சில நடிகர்கள் இருந்தனர் அந்த வகையில் ரஜினி கமலுக்கே அவ்வபோது டஃப் கொடுத்து வந்தவர் சத்யராஜ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டும் இருக்காமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டு விளங்கினார்.
மேலும் சினிமா உலகில் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமடைந்தார் சினிமா உலகில் இப்பொழுதும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் இப்பொழுது ஹீரோ வாய்ப்பு இல்லை என்றாலும் சினிமா உலகில் டாப் ஹீரோயின் படங்களில் சித்தப்பா, அப்பா, வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசதி வருகிறார்.
இதனால் அவரது மார்க்கெட் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வீட்டில விசேஷம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது இதில் சத்யராஜின் மாறுபட்ட நடிப்பு பலரையும் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சத்யராஜ் செய்துள்ள சாதனையை இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகரும் செய்யவில்லை அப்படி ஒரு சாதனையை அவர் செய்திருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். சத்யராஜ் 90 கால கட்டங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் அதுவும் ஒரு வருடத்தில் மட்டுமே நடிகர் சத்யராஜ் சுமார் 25 படங்களில் நடித்து அசதி உள்ளாராம்.
அப்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்த ரஜினி, கமல் கூட இந்த அளவிற்கு படங்களில் கமிட் ஆகி நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடிகர் சத்யராஜ் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.