Lokesh kanagaraj : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர். படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் , விநாயகன், வசந்த் ரவி, தமன்னா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி 4000 -க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்பொழுது வரை மட்டுமே 585 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் பெரிய நடிகரின் படங்கள் இல்லை என்பதால் ஜெயிலர் படத்தின் வசூல் குறையப்போவதில்லை என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்திலேயும் ரஜினி நடித்து முடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஜெய்பீம் படத்தை இயக்கி வெற்றிகண்ட டிஜே ஞானவேல் உடன் கைகோர்த்து ரஜினி படம் பண்ண உள்ளதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் லீலா பேலஸில் மிகப் பிரமாண்டமாக பூஜை நடந்தது. தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார் ரஜினி அண்மையில் லோகேஷ் கனகராஜ் கூட ரஜினி சந்தித்து மலர் பூ கொடுத்த புகைப்படம் வெளிவந்தது.
இதையெல்லாம் வைத்து பார்க்கையில் ரஜினியின் திரைப்படத்தை லோகேஷ் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது அதற்கான அப்டேட் வெகு விரைவிலேயே வரும் என பலரும் சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் 171-வது திரைப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்க போகும் சம்பளம் குறித்து ஒரு பேச்சு அடிபட்டுள்ளது.
அதன்படி பார்க்கையில் ரஜினியுடன் இவர் இணையும் படத்திற்கு லோகேஷின் சம்பளம் சுமார் 60 கோடி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. லியோ திரைப்படம் ஆக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த படம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இதைவிட அதிக சம்பளம் கேட்க கூட வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.