ரஜினியின் 170 வது திரைப்படத்தில் லக்கி வில்லனை களம் இறக்கும் படக்குழு.! அடடா இவர் இறங்கினாலே படம் ஹிட் தான்.

Rajini 170
Rajini 170

Rajini 170 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக 170வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் தலைப்பு இதுவரை வெளியிடவில்லை ஆனால் இந்த திரைப்படத்தை டிஜே ஞானவள் ராஜா தான் இயக்குகிறார் இவர் இதற்கு முன்பு பயணம், ஜெய் பீம் ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கியவர்.

தலைவர் 170 வது திரைப்படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி 170 ஆவது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரபலமான சிகை அலங்கார நிபுணர் ஒருவர் மேக்கப் போட்டுள்ளார் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமீபத்தில் வைரலானது. இந்த திரைப்படத்தில் தற்பொழுது பகத் பாஸில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பகத் பாசில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார் இவர் மலையாளத்தில் குணச்சத்திர வேடங்களில் நடித்து வந்தவர். அது மட்டும் இல்லாமல் நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார். தமிழில் இவர் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதிலும் இவர் நடிப்பில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் கச்சிதமாக பொருந்தி அந்த திரைப்படம் வெற்றி கண்டுள்ளது.

கடைசியாக மாமன்னன் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது ரஜினியின் 170வது திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது ஏற்கனவே இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன் இணைந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் நானி இந்த திரைப்படத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சமீப காலமாக பிறமொழி நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் ஜாக்கி ஷரப் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில் என பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

இப்படி பல மொழி நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளதற்கு காரணம் தமிழ் சினிமா தமிழை தாண்டி பாலிவுட் சினிமா வரை ஹிட் அடித்து வருகிறது, அதனால் பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கிறது. அந்த வகையில் தலைவர் 170-வது திரைப்படம் தமிழை தாண்டி பல இடங்களில் வெற்றி நடை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.