அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்பொழுது சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்காக பல நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு இணையாக இந்த வயதிலும் கெத்தாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் சிவராஜ் குமார் பிரியங்கா மோகன், வசந்த் ரவி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விநாயகன். ஜாக்கி ஷரப் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகள் இயக்கி வரும் லால் சலாம் திரைப்படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறாராம். தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. முதலில் இந்த திரைப்படத்தை தயாரிக்க தயக்கம் காட்டிய லைக்கா நிறுவனம் ரஜினி அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறேன் என லைக்கா நிறுவனத்திற்கு வாக்கு கொடுத்ததால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டது.
லைக்கா நிறுவனம் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஆனால் சமீப காலமாக அனைத்து திரைப்படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்து வருகிறது அப்படி இருக்கும் நிலையில் ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளராக வளம் வந்த ஞானவேல் ராஜா இயக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாக இருக்கிறது ஏனென்றால் ரஜினி ஏற்கனவே லைக்கா நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாக்குறுதி கொடுத்துள்ளார் அதனால் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகும்.
அடுத்தடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்களுக்கும் ரஜினி 250 கோடி வரை சம்பளமாக பெறுவார் என ஏற்கனவே தகவல் வெளியானது. அதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தன்னுடைய மகளுக்காக ரஜினி கார்ப்பரேட் நிறுவனமான லைக்கா நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.