தலைவர் 170 படத்தில் விநாயகன் மாதிரி பவர்ஃபுல் வில்லனை களம் இறக்கும் இயக்குனர் ஞானவேல்.? யார் தெரியுமா.?

Actor Rajini
Actor Rajini

Rajini  : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படத்தைக் கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது 12 நாட்கள் முடிவில் மட்டுமே ஜெயில் திரைப்படம் சுமார் 510 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் ரஜினி இமயமலைக்கு சென்று தற்பொழுது சென்னை வந்துள்ளார் அடுத்ததாக தனது 170 வது திரைப்படத்திலும் நடிக்க ரெடியாகிவிட்டார். ஜெய் பீம் படத்தை இயக்கி வெற்றிகண்ட ஞானவேல் தான்..

தலைவர் 170 படத்தை இயக்க உள்ளார் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. ரஜினி ஹீரோ என்பது உறுதியாகிய நிலையில் மற்ற நடிகர் நடிகைகளை படக்குழு தேர்வு செய்து வருகிறது இந்த நிலையில் தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் என்பது குறித்து ஒரு தகவல் கசிந்து உள்ளது.

ஜெயிலர் படத்தின் கதைகளும் சிறப்பாக இருந்தாலும் அந்த படத்தில் ரஜினிக்கு நிகரான வில்லனாக விநாயகன் இருந்ததால் இன்னும் பிளஸ்ஸாக அமைந்தது அதேபோல தலைவர் 170 படத்திலும் ரஜினிக்கு நிகரான ஒரு பவர்ஃபுல் வில்லனாக போட பிரபல நடிகருடன் பேச்சுவார்த்தை நடித்து வருகிறது.

அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல பாலிவுட் கிங் அமிதாப் பச்சனை தான் இந்த  திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க போவதாக தகவல்கள் வெளி வருகின்றன இது நடக்கும்பட்சத்தில் இந்த படத்தில் காண எதிர்பார்ப்பு உலகளவில் இருக்கும். படம் வெளி வந்தால் நிச்சயம் ஆயிரம் கோடி வசூல் அள்ளுவது உறுதி எனக் கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.