நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்திரன் அவர்களை தொடர்ந்து அவரது மகன் சிம்பு சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு ஒரு கட்டத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார் தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் தனது திறமை அதோடு மட்டும் முடங்கிவிடக் கூடாது.
என்பதால் நடிகர் சிம்பு நடிகர் என்று அந்தஸ்தையும் தாண்டி இயக்குனராகவும், பாடகராகவும் மாறி வெற்றி பெற்றார் இப்படி இருந்தாலும் இவரது திரைப்படங்கள் ஒரு கட்டத்தில் தொடர் தோல்வியை சந்திக்க மனவேதனையில் வீட்டிலேயே கிடந்தார் இதிலிருந்து மீண்டு வர தனது எண்ணங்களை முழுமையாக மாற்றி உடல் எடைய புதிய அவதாரம் எடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் 100 கோடி வசூல் செய்த நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. உடனே வெளிநாட்டில் ஆபரேஷன் செய்து தற்போது நலமாக இருக்கிறார்.
அண்மையில் விமான நிலையத்தில் டி ராஜேந்தர் பேசியது நான் தற்பொழுது நலமாக இருக்கிறேன் எனக்கு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என கூறினார். மேலும் பேசிய டி ராஜேந்தர் சிம்புவின் திருமணம் குறித்தும் பேசினார் அப்பொழுது அவர் சொன்னது சிம்புவின் நல்ல மனதிற்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும் மேலும் திருமணம் என்பது கடவுள் தீர்மானிப்பது இருமனம் ஒன்று சேர்ந்தால் தான் அது திருமணம்..
எங்கள் வீட்டிற்கு நல்ல குணமுடைய திருமகள் மருமகளாக வருவார் என பஞ்ச் டயலாக் கடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இச்செய்தியை தற்பொழுது ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும் சற்று வருத்தத்துடன் தான் இருக்கின்றனர் காரணம் டி ராஜேந்தர் இதுபோல பல தடவை சிம்புவுக்கு கல்யாணம் ஆகும் என கூறுகிறார் ஆனால் இதுவரை நடந்தப்பாடு இல்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.