ராஜமௌலியின் RRR திரைப்படம் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தெரியுமா.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

rrr
rrr

பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி பிரம்மாண்டமாக RRR என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது பல மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.  மேலும் RRR திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியது.

மேலும் டிவிவி தானய்யா தயாரித்த RRR திரைப்படத்தை தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகளில் திரு சுபாஷ்கரன் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜி மற்றும் கொமரம் பீம் ஆகியோர்களின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் ராம்சரன் அல்லூரி சீதாராம ராஜாவாக நடித்துள்ளார். அதேபோல் ஆந்திராவை சேர்ந்த அல்லூரி  சுதந்திர தினத்துக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர். அதேபோல் ஜூனியர் என்டிஆர் கொமரம் பீம் ஆக நடித்துள்ளார் இவர் ஹைதராபாத் நிஜாம் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடியவர் மேலும் இவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.

இந்த இரண்டு பெரும் வீரர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஆனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை கதையே இந்த திரைப்படம். மூன்று மணி நேரம் ஐந்து நிமிடங்கள் இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம்.  இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் OTT உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது அதேபோல் ஹிந்தி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

rrr
rrr