சினிமா உலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அந்த படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துகின்றனர். இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படம் குறைந்தது 150 கோடி வசூலை அள்ளுகின்றன என்பது சர்வசாதாரன ஒன்றாக மாறிவிட்டது.
எடுத்துக்காட்டாக ராஜமவுலியின் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி புதிய சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் மீண்டும் உருவான RRR திரைப்படமும் ஆயிரம் கோடியை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் குறைந்தது 300 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைக்கின்றனர்.
இப்படி காலங்கள் போய்க்கொண்டு இருக்கிறது ஆனால் பாகுபலி படத்திற்கு முன்பாகவே பல கோடிகளை அள்ளி புதிய உச்சத்தை தொட்ட திரைப்படம் தான் தங்கல் இந்த திரைப்படத்தின் வசூல் மட்டும் 2,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் முழுக்க முழுக்க மதத்தை மையமாக வைத்து உருவானது இந்த படம் வெற்றி பெற மிக முக்கிய காரணம் அமீர்கானின் சிறந்த நடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகும் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடம்பை மாற்றி அமைத்து சிறப்பாக நடித்து அசத்தியிருப்பார் சொல்லப்போனால் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக இந்த படம் எடுத்துக் காட்டியிருக்கும். இந்தியாவில் எப்படி இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது அதேபோல சைனாவிலும் இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது.
தங்கல் திரைப்படம் நடிகர் அமீர்கானின் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் படம் 2000 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது இது வரை எந்த ஒரு படமும் இந்த படத்தின் சாதனையை முறியடிக்க முடியவில்லையாம். பாகுபலி-2 தங்கள் படத்தின் வசூலில் கிட்டத்தட்ட நெருங்கினாலும் அதை முறியடிக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.