ராஜமௌலியின் அடுத்த படத்தால் நொந்து நூடுல்ஸ் ஆன ஏ ஆர் முருகதாஸ்.. வெளிவந்த பரபரப்பு தகவல்

rajamouli
rajamouli

பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பவர் ராஜமௌலி. இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது குறிப்பாக கடைசியாக எடுத்த RRR திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றது மேலும் இந்த படம்  பல விருதுகளை அள்ளியது.

கடைசியாக கூட ஆஸ்கார் நாமினேஷனில் கலந்துகொண்டு நாடு நாட்டுப் பாடலுக்கு ஆஸ்கார் விருதை தட்டி சென்றது அதனைத் தொடர்ந்து ராஜமௌலி  முழுக்க முழுக்க விலங்களை வைத்து ஒரு படம் எடுக்க இருக்கிறார். ராம்சரண் முக்கிய ரோலில் நடிக்கிராம்.. படத்தின் ஷூட்டிங் அமெரிக்கா,  சீனா போன்ற இடங்களில் நடைபெற இருக்கிறது.

படத்திற்கு உண்மையான விலங்குகளை பயன்படுத்தாமல் அனிமேட்ரானிக்ஸ் முறையில் மெஷின் விலங்குகளை உருவாக்கி பயன்படுத்த போகிறார். அதில் அனிமேஷன் கலந்து பார்க்க தத்தூரபமாக இருக்குமாம். இந்த படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கி இருக்கின்றனர் ஆனால் முதலில் இது போன்ற ஒரு கதையை ஏ ஆர் முருகதாஸ்தான் எடுக்கப் போகிறார் என செய்திகள் எல்லாம் பெரிய அளவில் வெளியானது.

உண்மையில் அவரும் கோரில்லா படம் ஒன்றை எடுக்க இருக்கிறார். கதை எழுதி தயாராக இருந்திருக்கிறார் ஆனால் படத்தின் பட்ஜெட் பெருசு என்பதால் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் கிடைக்கவில்லை இதனால் கதையை வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தார் இந்த சமயத்தில் ராஜமௌலி..

இதுபோன்ற ஒரு கதையை அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடுக்க இருப்பதால் முருகதாஸ் செம்ம ஆஃப் செட்டில் இருக்கிறாராம்..  இனிமேல் இது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுத்தால் ராஜமௌலியை காப்பி அடித்து எடுத்தார் என கூறுவார்கள் என்று அந்தக் கதையை என்ன செய்வது என்று தெரியாமல் வைத்துக்கொண்டு மண்டையை பிச்சுக் கொண்டிருக்கிறாராம் முருகதாஸ்.