இயக்குனர் ராஜமௌலி தொடர்ந்து பிரமாண்ட பட்ஜெட்டில் படங்களை இயக்கி வெற்றிகண்டு வருகிறார் அந்த வகையில் ராஜமௌலி இதுவரை மகதீரா, நான் ஈ, பாகுபலி அதன் இரண்டாவது பாகம் கடைசியாக கூட ஜூனியர் என்டிஆர் ராம்சரனை வைத்து RRR என்னும் படத்தை எடுத்திருந்தார்.
இந்த படம் ஆக்சன் செண்டிமெண்ட் என அனைத்தும் பிரமாதமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது வசூலிலும் அடித்து நொறுக்கியது. குறிப்பாக பாகுபலி 2 படத்திற்கு பிறகு ஆயிரம் கோடி வசூல் செய்த திரைப்படம் RRR.
இந்த படத்தை தொடர்ந்து ராஜமௌலி தெலுங்கு டாப் ஹீரோ மகேஷ்பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்க உள்ளார் அந்த படம் ஒரு புதையல் வேட்டையை தேடி ஓடும் படமாக உருவாகவும் உள்ளது. இதற்காக ராஜமௌலி 500 கோடி பட்ஜெட்டை எடுத்துக் கொண்டும், படக்குழுவை அழைத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்கா காடுபக்கம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது கனவு படம் குறித்தும் பேசி உள்ளார் ராஜமௌலி. மகேஷ் பாபு நடிக்கும் மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்கப் போகிறேன் இதற்கு பிறகு தொடர்ச்சியாக நான்கு படங்களை இயக்க திட்டமிட்டுள்ளேன் இந்த படங்களை இயக்கி முடித்த பிறகு தனது கனவு படமான மகாபாரதத்தை இயக்க போகிறேன்
அந்த படத்தை இயக்க நீண்ட காலம் தேவைப்படும் என்பதால் எப்பொழுது துவங்கப் போகிறேன் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை முதலில் தற்போது எடுக்க உள்ள நான்கு படங்களை இயக்கி முடிக்க எத்தனை காலமாகும் என தெரியவில்லை அதனால் கனவு பட வேலைகள் எப்பொழுது துவங்கப்படும் என தற்போதைய சூழலில் கூற முடியாது என்றார்.