“RRR” படத்தைத் தொடர்ந்து அடுத்து இரண்டு டாப் ஹீரோக்களை வைத்து படம் பண்ணும் ராஜாமௌலி.? கதை ஒவ்வொன்னும் வேற மாதிரி இருக்கு..

rajamouli-
rajamouli-

இயக்குனர் ராஜமௌலி நான் ஈ  பாகுபலி 1,2 போன்ற சிறப்பான படங்களை கொடுத்து தனது பெயரை இந்திய அளவில் உயர்த்திக் கொண்டார் அதனை தொடர்ந்து இவர் இயக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் மக்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் கடைசியாக ராஜாமௌலி பாகுபலி இரண்டாம் பாகத்தில் எடுத்திருந்தார்.

இந்த படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இவை தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் RRR. இந்த திரைப்படம் ஒரு வழியாக வருகின்ற மார்ச் 25ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவுடன் கைகோர்க்கிறார்.

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கும் இந்த திரைப்படம் சாகசம் மற்றும் புதையல் வேட்டையை மையமாக வைத்து உருவாகும் என கூறப்படுகிறது இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க ஆப்பிரிக்க கண்டத்தில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படமும் மிகப்பெரிய ஒரு பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகேஷ் பாபு  படத்தை தொடர்ந்து  அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் ஒரு படத்தில் ராஜாமௌலி கைகோர்க்க  இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இருவரும் முதல் முறையாக இணைய இருக்கிறார்கள் இந்த படம் பாகுபலி படம் ஒரே ஒரு அரசர் காலத்து படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி பார்க்கையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து டாப் ஹீரோக்களை வைத்து படம் பண்ண ரெடியாக இருக்கிறார் ராஜமௌலி. இதனால் அவரது வளர்ச்சியில் அமோகமாக இருந்து வருகிறது.