ராஜமௌளியின் அடுத்த படம் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் மிரட்டலாக இருக்கும்.! ஹீரோ இவர் தான் தெரியுமா..?

rajamouli
rajamouli

காலங்கள் முன்னேற முன்னேற ரசிகர்கள் வித்தியாசமான மற்றும் எச்டி தரத்தில் படத்தை பார்க்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் அந்த வகையில் ஹாலிவுட்டில் மட்டுமே ஹை குவாலிட்டி மற்றும் ட்ராபிக்ஸ் அதிகம் பயன்படுத்திய வித்தியாசமான படங்களை எடுக்கின்றனர். ஹாலிவுட்களுக்கு இணையாக தென்னிந்திய சினிமா ஊடகமும் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் சிறப்பான படங்களை எடுத்து அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் ராஜமௌலி அண்மைக்காலமாக எடுக்கும் படங்கள்  500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. அதனால் படத்தில் அதிகப்படியான கிராபிக்ஸ் மற்றும் hd தரத்தில் படம் உருவாகிறது இதனால் ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடுகின்றனர் மேலும் இதுவரை இல்லாத கதையை அவர் எடுப்பது அந்த படத்திற்கு பிளஸ்ஸாக அமைவதாக கூறப்படுகிறது.

இதுவரை ராஜமவுலி  பாகுபலி, பாகுபலி 2 கடைசியாக கூட ராம்சரண் ஜூனியர் என்டிஆர் வைத்து இவர் எடுத்த RRR படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்க போகும் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்து வரும் டோராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ராஜமவுலி கலந்து கொண்டார் அப்பொழுது பேசிய அவர் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் இந்தியானா ஜோன்ஸ் போன்ற கிளாசிக் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக மகேஷ்பாபுவின் படம் எடுக்கப்படும் என கூறினார். அதோடு மகேஷ் பாபு உடன் எனது அடுத்த படம் ஒரு உலகளாவிய அதிரடி சாகசமாக இருக்கும் இது ஒரு வகையான ஜேம்ஸ் பாண்ட் அல்லது இந்தியானா ஜோன்ஸ் படமாக இந்தியர்களை கொண்டதாக இருக்கும் என கூறியுள்ளார்.

அதேபோல ராஜமௌலியின் தந்தையும் எழுத்தாளருமான கேவி விஜேந்திரன் காடுகளின் பின்னணிகளில் எடுக்கப்படும் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் இன்னும் எழுதி முடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். சமீபத்தில் மகேஷ் பாபு கூட ராஜமௌலியின் தனது புதிய படம் பற்றி பேசி இருந்தார்  அவருடன் பணியாற்றுவது ஒரு கனவு. ஒரே நேரத்தில் 25 படங்கள் எடுப்பது போன்று அவரது உடல் ரீதியாக கடினமாக இருக்கும் மேலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் இது ஒரு பான் இந்திய படமாக இருக்கும் பல தடைகளை தகர்த்து நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு எங்கள் வேலைகளை எடுத்து சொல்வோம் என நம்புகிறேன் என மகேஷ்பாபு தெரிவித்தார்.