இயக்குனர் ராஜமவுலி இந்திய சினிமா துறையில் மட்டுமல்லாமல் உலக அளவில் மிகவும் பிரபல இயக்குனராக மாறியவர் இவர் இயக்கத்தில் வெளியாகிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது அது மட்டும் இல்லாமல் நாட்டுப்புறப் பாடலுக்காக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஆஸ்கார் விருதுவரை சென்று விருதை வென்றது.
ராஜமௌவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இவர் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளர் இவர் திரைக்கதையில் உருவான திரைப்படம் தான் பாகுபலி இந்த திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மிகவும் பிரபலமாக வெளியாகி வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் இவர் எழுதிய கதை தான் ஆர் ஆர் ஆர் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது.
இப்பொழுது கோடியில் புரளும் ராஜமவுளின் குடும்பம் ஒரு காலகட்டத்தில் மிகவும் ஏழ்மையாக இருந்தது. ராஜமௌலியின் குடும்பம் முதலில் பணக்கார குடும்பம் தான் 360 ஏக்கர் சொத்துக்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள் ஆனால் ராஜமவுலிக்கு 10 வயது இருக்கும் பொழுது அவர்கள் மொத்த சொத்தையும் விற்று விட்டார்கள்.
அதன் விளைவாக மொத்த குடும்பமும் சென்னைக்கு வந்து ஒரே ஒரு படுக்கையறை வீட்டில் வாடகைக்கு தங்கினார்கள் வீட்டில் 13 பேர் இருந்தாலும் சம்பாதிப்பது மட்டும் ராஜமௌலியின் அண்ணன் மட்டுமே அதனால் வாடகை உட்பட அனைத்து விஷயங்களையும் அவர்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
தன்னுடைய 22 வயது வரை எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தவர் ராஜமவுலி அதனால் தன்னுடைய அப்பா ஏதாவது செய் என்று சொல்லிக் கொண்டே இருப்பார் அதன் விளைவாக ராஜமவுலி வாழ்க்கையில் சீரியஸாக உருமாறினார் அதன் விளைவாக தான் தன்னுடைய வேலையை ஆரம்பித்தார் ராஜமௌலி அதன் பிறகு பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
தன்னுடைய இயக்கத்தின் மூலம் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தார் அது மட்டும் இல்லாமல் வெறும் வெற்றியாக இருக்க கூடாது சரித்திரமாக மாற வேண்டும் என ஒவ்வொரு கதையையும் செதுக்கி தன்னுடைய இயக்கத்தின் மூலம் விட்டதை மீண்டும் பிடிக்கும் அளவிற்கு ஒவ்வொரு படத்தையும் இயக்கி வருகிறார் அந்த வகையில் தான் தற்பொழுது இவர் பல கோடி சொத்துக்களை சேர்த்து வருகிறார்.
தன்னுடைய 10 வயதில் இழந்த அனைத்தையும் தற்போது ஒவ்வொன்றாக சேர்த்து வைத்து வருகிறார் என கூறப்படுகிறது.