கண்ணீரால் சூர்யாவை தனது வீட்டுக்கு வர வைத்த ராஜாகண்ணு மனைவி..! கண்ணீர் துடைக்க நடிகர் சூர்யா பார்வதிக்கு கொடுத்த நன்கொடை இத்தனை லட்சமா..?

parvathy-02
parvathy-02

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா இவர் சமீபத்தில் ஞானவேல் இயக்கத்தில் ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்தது.

திரைப்படமானது தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மாபெரும் வசூலையும் வென்றுள்ளது. இது ஒருபக்கமிருக்க இந்தத் திரைப்படத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகளும் உருவானது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் மக்களின் வாழ்க்கை மற்றும்  உரிமைக்கான போராட்டம் மற்றும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக எடுத்த இந்த திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியும் காட்டியுள்ளதாக பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த செய்தியில் மூலமாக பல்வேறு தரப்பு மக்களும் சூர்யா மீது எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.  எனவே நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் விமர்சனங்களுக்கு உள்ளான காட்சிகளை உடனடியாக மாற்றம் செய்து விட்டார்.

பொதுவாக சொல்லப்போனால் இந்த திரைப்படம் வெளியான பிறகு மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அந்த வகையில் இந்த கதைக்கு மிகவும் முக்கியமானவர் என்றால் அது ராஜாகண்ணு மனைவி பார்வதி தான்

இந்த பார்வதியை நடிகர் சூர்யா நேற்று சந்திக்க சென்ற பொழுது அவருக்கு ஆதரவு தெரிவித்து அதுமட்டுமில்லாமல் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 15 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது.

parvathy-02
parvathy-02

இவ்வாறு திடீரென சூர்யா செய்ததற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பிரபல செய்தியாளர்கள் பேட்டி எடுக்கும்போது ராஜாகண்ணு மனைவி சூர்யா தன்னை நேரில் கூட வந்து பார்க்கவில்லை ஆனால் என் கதையை வைத்து கோடி கோடியாய் பணம் சம்பாதித்து விட்டார் என கண்ணீர் மல்க பேசியுள்ளார் இதன் காரணமாகவே சூர்யா தற்சமயம் நேரில் வந்துள்ளார் என பலர் கூறுகிறார்கள்.