கனா காணும் காலங்கள் சீரியல் பிரபலங்கள் ராஜ வெற்றி பிரபு மற்றும் தீபிகாவின் திருமண புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதாவது சமீப காலங்களாக தொடர்ந்து ஏராளமான சீரியல் பிரபலங்கள் தங்களுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளை தொடர்ந்து காதல் கல்யாணம் செய்து வருகிறார்கள். அதில் முக்கியமாக விஜய் தொலைக்காட்சி சீரியல் பிரபலங்கள் தங்களுடன் நடிக்கும் பிரபலங்களை திருமணம் செய்து கொள்வது ஏராளமாக இருந்து வருகிறது.
இவ்வாறு இந்த லிஸ்டில் தற்பொழுது ராஜ மற்றும் தீபிகா இணைந்துள்ளார்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் கனா காணும் காலங்கள் இந்த சீரியல் கடந்த 2006ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை வைத்து ஒளிபரப்பப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு கிடைத்தது.
இவ்வாறு இந்த சீரியல் வெற்றியை வைத்து கல்லூரி காலங்கள் என்ற சீரியலும் ஒளிபரப்பானது. இப்படிப்பட்ட நிலையில் கனா காணும் சீரியல்கள் தொடரின் 2வது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் தீபிகா. டிக் டாக் மூலம் பிரபலமான இவருக்கு கனா காணும் காலங்கள் சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இவ்வாறு இவரைப்போலவே டிக் டாக் மூலம் பிரபலமாகி இதே தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளவர் தான் ராஜ வெற்றி பிரபு. இந்த சீரியலில் நடித்து வந்த இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில் பிறகு தீபிகா தனக்கு ஒருவர் ப்ரொபோஸ் செய்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் அந்த நபர் யாராக இருக்கும் என ரசிகர்கள் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு பிறகு அந்த நபர் ராஜ வெற்றி தான் என்று அறிவித்திருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இப்படிப்பட்ட நிலையில் மேலும் தங்களுடைய இருவிட்டார் சமதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.