வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் பலரும் அழகாகவும் திறமையை வெளிப்படுத்தக் கூடியவராகவும் இருந்து வருகின்றனர். ஆனால் சின்னத்திரை நடிகைகளுக்கு எடுத்த உடனே சினிமாவில் பயணிக்க செல்வாக்கும் பணமும் இல்லாததால் முதலில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி அதன் மூலம் முன்னேறுகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் படும் பிரபலம் அந்த சீரியல் ஹிட் அடிக்க முக்கிய காரணம் அதில் நடிக்கும் நடிகைகள் தான். சின்னத்திரை நடிகைகள் ஒரு பக்கம் சீரியலில் தனது திறமையை வெளிக்காட்டினாலும் மறுபக்கம் சோசியல் மீடியாவிலும் டாப் நடிகைகளுக்கு நிகராக..
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றனர். விஜய் டிவியில் மக்கள் பலரின் ஃபேவரிட் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி சீசன் 2. இதில் வில்லி கதாபாத்திரத்தில் வீஜே அர்ச்சனா நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் தொலைக்காட்சியில் ஆங்கர் ஆகவும் ஒரு சில சீரியலில் சின்ன கதாபாத்திரத்திலும் வந்து சென்றாலும்..
ராஜா ராணி சீசன் 2 மூலமே பெரிதும் பிரபலமடைந்தார். இவரது நடிப்பு இந்த சீரியலை பார்ப்பவர்களுக்கு என்டர்டைன்மென்ட் ஆக இருந்து வருகிறது. சீரியல் தவிர அர்ச்சனா சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவதால் அவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தனது ரசிகர்களை கிரங்கடிக்கும் வகையில் பிங்க் நிற புடவையில் சைடு போஸில் செம்ம கூலாக ரொமான்டிக்காக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் செம்ம வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன இதோ அந்த புகைப்படம்.