ராஜா ராணி சீரியல் சித்து இத்தனை படங்களில் நடித்துள்ளாரா.! வியப்பில் ரசிகர்கள்..

sidhu-1
sidhu-1

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் ராஜா ராணி 2.

மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முழுக்க முழுக்க ஒரு கணவன் தன்னுடைய மனைவியின் கணவர் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ராஜா ராணி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் இந்த சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் சித்து. இவர் இதற்கு முன்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் எளிதில் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இவர் தற்பொழுது ராஜா ராணி சீரியலில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் தமிழில் இதற்கு முன்பு வெளியான வல்லினம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் மட்டும் இல்லாமல் குற்றம் கடிதல், பீச்சாங்கை, அகோரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் சித்து நடித்துள்ளார்.

அந்த வகையில் சித்து வல்லினம் திரைப்படத்தில் நடித்த காட்சிகளின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வல்லினம் திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான நிலையில் பெரிதாக இவருடைய கேரக்டர்கள் சொல்லும் அளவிற்கு பிரபலமடைய காரணத்தினால் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

sidhu
sidhu

இவ்வாறு திரைப்படங்களில் அவருக்கு பெரிதாக பிரபலம் கிடைக்கவில்லை என்றாலும் சீரியல்களில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கானோர் பின்பற்றி வருகின்றனர்.