Raja Rani serial actress: ராஜா ராணி சீரியல் நடிகை தனது நீண்ட நாள் கணவரை இரு வீட்டார் சமதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவருடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீப காலங்களாக வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தாங்கள் நடித்த முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் சீரியல் நடிகைகள் கவர்ந்து விடுகின்றனர். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் இரண்டாவது பாகத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடிகை சங்கீதா.
மேலும் சில சீரியல்களில் நடித்திருக்கும் சங்கீதா சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி சில மாதங்களுக்கு முன்பு தனது திருமண அறிவுப்பை தெரிவித்திருந்தார். ஆனால் இவர் யார் திருமணம் செய்யப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகாமல் இருந்து வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் தான் பிரபல யூடியூபர் TTF வாசனுக்கும் நடிகை சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக பல வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இதற்கு சங்கீதா வாசன் எனக்கு தம்பி போன்றவர் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
எனவே இதன் பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த நிலையில் தற்போது தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் என்பவரை இருவீட்டார் சமதத்துடன் திருமணம் செய்துக் கொண்டுள்ளார் நேற்று இவர்களுடைய திருமணம் எளிமையாக நடைப்பெற்று முடிந்தது.
இவர்களுடைய திருமணத்தில் ராஜா ராணி சீரியல் பிரபலங்கள் மட்டுமல்லாமல் ஏராளமான சின்னத்திரை பிரபலங்களும் பங்கு பெற்றனர். இவ்வாறு சங்கீதாவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..