17 அரியர்களை வைத்து சீரியலில் கொடிகட்டி பறக்கும் ராஜா ராணி சீரியல் நடிகை.! அவரே வெளியிட்ட தகவல்.

raja rani
raja rani

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலில் ஹீரோயினாக செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா மானசா கல்லூரியில் 17 அரியர் வைத்துள்ளதாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். நம்ம பிரபலமான ஆலியா மானசா கல்லூரியில் மக்காக இருந்திருக்கிறாரா இது தெரியாம போச்சே என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள்.

பலரின் கருத்து என்னவாக இருக்குமென்றால் படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற கருத்தை மட்டும்தான் முன்வைப்பார்கள். ஆனால் இதையெல்லாம் முற்றிலும் உடைத்த ஆலியா மானசா படிக்காமலும் சாதிக்கலாம் என்று ஒரு தரப்பை வைத்துள்ளார். பதினேழாம் வயதில் படிப்பில் ஆர்வம் இல்லாததால் மாடலிங் செய்து வந்தார். அதன் மூலம் பல சீரியலில் ஹீரோயினாக மட்டுமல்லாமல் திரைப்படமும் எடுத்து தனது வாழ்க்கையை துவங்கியுள்ளார்.

ஆனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் நன்றாக தான் படித்து வந்திருக்கிறார். கல்லூரி வாழ்க்கையில் மட்டும்தான் படிப்பில் ஆர்வம் காட்டாமல் 17 அரியர் வைத்திருக்கிறார். இதனை இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவருக்கு பதிலளித்திருக்கிறார். அப்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலில் செம்பவமாக நடித்து வந்து அதில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவியை காதலித்து திருமணம் செய்தார்.

சஞ்சீவை திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல் ராஜா ராணி சீசன் 2 விலும் நடித்து வந்தார்.இந்நிலையில் பிடித்ததில் மட்டும் ஆர்வம் காட்டினால் தனது வாழ்க்கையை எப்படியும் சாதிக்க முடியும் என்று கருத்தை முன்வைத்திருக்கிறார். ஆலியா மானசா இவரின் நடிப்பு திறமைக்கு அளவே இல்லை என்று ரசிகர்கள் பெரிதும் பாராட்டி உள்ளார்.