Raja Rani serial Actress Alya Manasa new look photo: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆலியா மானசா. அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனவே இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தங்களின் குழந்தைகளுக்கு இவர்கள் ஜலா சையத் என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆன ஆலியா மானசா வீட்டிலேயே முடங்கி உள்ளதால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம், விளம்பரம், கன் ஷூட்டிங், போன்ற பல வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதற்கு ரசிகர்கள் பிள்ளை பெற்ற பச்ச உடம்பை வைத்துக்கொண்டு என்ன ஆட்டம் ஆடுறம்மா என்று கமெண்ட் செய்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இவர் குழந்தை பிறந்த பிறகு மிகவும் ஒல்லியாக ஆகிவிட்டார். எனவே தனது ஸ்லிம் லுக்கை போட்டோ ஷாட் எடுத்து புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.