ஹீரோவாக அறிமுகமாகும் ராஜா ராணி சீரியல் நடிகர்.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

பெரும்பாலும் சமீப காலங்களாக சின்னத்திரையில் மூலம் பிரபலமடைந்த ஏராளமான நடிகர், நடிகைகளுக்கு தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதுவும் விஜய் டிவியின் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.அந்த வகையில் இதற்கு முன்னோடிகளாக சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற நடிகைகளை கூறலாம்.

இவர்களைத் தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் தற்பொழுது வெள்ளித்திரையில் நடித்து வரும் நிலையில் தற்பொழுது சீரியல் நடிகர் சித்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த வகையில் விஜய் டிவியில் ப்ரைம் ரைன் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் சித்து.

இவர் இதற்கு முன்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலில் நடித்திருந்தார்.இந்த சீரியல் இரண்டுமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தினை பெற்று தந்தது.மேலும் சித்து நடிகை ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவில் இருந்து வந்த சித்து சுமார் ஆறு வருடங்களாக நடன கலைஞராக பணியாற்றி வந்தார்.

sidhu
sidhu

அதன் பிறகு இதன் மூலம் சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சின்ன திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருகிறார்.மேலும் சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகி ஆலியா மானசாவிற்கு ஜோடியாக சித்து நடித்த வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பலருக்கும் தற்பொழுது சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில் சித்துவுக்கும் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment