தற்போது சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இவர் பிரபல இயக்குனரான சங்கருக்கு துணை இயக்குனராக பணியாற்றி வந்தார்.
இதன் மூலம் பலவற்றை கற்றுக் கொண்டு தற்போது தனது திறமையினால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். அந்த வகையில் முதன் முதலில் இவர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராஜா ராணி. இத்திரைப்படம் 2013ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஆர்யா,ஜெய், நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் ஒன்றிணைந்து இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். அந்தவகையில் இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து இயக்கி இருந்ததால் இளசுகளை வெகுவாக கவர்ந்தது.
அந்தவகையில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர்தான் நடிகர் ஜெய் இவர் சூர்யா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டரில் முதலில் ஜெய்க்கு பதிதாக சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் சிவகார்த்திகேயனால் நடிக்க முடியாமல் போனது.
அதன் பிறகுதான் சிவகார்த்திகேயன் அட்லீக்கு ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அட்லியின் முகப்புத்தகம் என்னும் குறும்படத்தில் சிவகார்த்திகேயன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள்.