ராஜா ராணி திரைப்படத்தில் மிகப்பெரிய தவறு செய்த அட்லீ..! இது உங்களுக்கே ஓவரா இல்லையா என கழுவி ஊற்றிய ரசிகர்கள்..!

raja-rani
raja-rani

raja rani movie nayanthara entry: தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் அட்லி இவர் முதன்முதலாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.இவ்வாறு அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட வித்தைகளை வைத்து கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி என்றும் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா மற்றும் ஜெய் அவர்களுக்கு ஜோடியாக நஸ்ரியா மற்றும் நயன்தாரா ஆகிய இரு கதாநாயகிகள் நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடித்து இருப்பார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றி கண்டது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நமது இயக்குனர் அட்லி தளபதி விஜய்யை வைத்து தெறி எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார் இவ்வாறு இந்த திரைப்படமும் அவருக்கு சரியான வெற்றியை கொடுத்தது மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் மக்களிடமும் தான் ஒரு பிரபலமான இயக்குனர் என்ற பெயரையும் சம்பாதிக்க வைத்தது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிகில் திரைப்படத்திலும் விஜய்யை வைத்து இயக்கியிருந்தார்.

இவ்வாறு தளபதி விஜயை வைத்து தொடர்ந்து 3 படங்களை இயக்கி மாபெரும் வெற்றி கண்ட நமது இயக்குனர் அட்லிக்கு முதல் வெற்றி என்றால் அது ராஜா ராணி திரைப்படம் தான் இந்த திரைப்படத்தை என்றும் ரசிகர்கள் மிக விரும்பி பார்த்து வருகிறார்கள். ஆனால் அவர் இயக்கம் திரைப்படங்கள் அனைத்துமே காப்பி என ரசிகர்கள் கூறுவது வழக்கம்.

raja-rani
raja-rani

அந்த வகையில் ராஜா ராணி திரைப்படம் மௌனராகம் திரைப்படத்தின் காப்பி என கூறப்பட்டது இது ஒரு பக்கம் இருக்க இவர்  ராஜா ராணி திரைப்படத்தில் செய்த ஒரு பெரிய மிஸ்டகை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் அதாவது நஸ்ரியாவின் பிளாஷ்பேக் ஓடும் பொழுது சந்தானமும் ஆர்யாவும் தியேட்டரில் படம் பார்க்கச் செல்வார்கள் அப்போது அங்கு சிவாஜி திரைபடம் ஓடிக்கொண்டிருக்கும் அதில் நயன்தாரா நடனம் ஆடி கொண்டு இருப்பார்.

raja-rani
raja-rani

ராஜா ராணி திரைப்படத்திலும் நயன்தாரா தான் ஹீரோயின் ஆகவே நயன்தாராவை ஆர்யா திரையில் பார்ப்பது மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் அவருக்கு மனைவியாகவும் நடித்திருப்பார் இதுவே இந்த திரைப்படத்தில் பெரிய தவறு என ரசிகர்கள் கூறி உள்ளார்கள்.