சந்தியாவை தலைமேல் தூக்கி வைத்து ஆடும் குடும்பத்தினர்கள்.! உச்சகட்ட கோபத்தில் அர்ச்சனா..

raja rani 12
raja rani 12

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜாராணி சீசன் 2 சீரியல் டாப் சீரியல் ஆக வளர்ந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல அமோக வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் டெலிவிஷனில் விருதும் கிடைத்தது.

இந்நிலையில் முன்னாள் காதலனான விக்கி பார்வதிக்கு அதிக தொந்தரவுகளை தொடர்ந்து தருகிறார். இதனை பார்வதி சந்தியாவிடம் கூறுகிறார். இதைக் கேட்ட சந்தியா அதிரடி முடிவுகளை எடுக்க தொடங்குகிறார்.

ஆனால்,விக்கி பார்வதிக்கு திருமணம் நடந்த நாளன்று பார்வதியுடன் சேர்ந்து எடுத்த போட்டோவை எடுத்து மிரட்டுகிறார். யாரும் எதிர்பார்க்காதபடி விக்கியை அசிங்கப்படுத்திய சந்தியா. போலீஸ் அதிகாரிகள் வந்து விக்கியை அழைத்துச் சென்றுவிட்டார்கள். சந்தியாவின் முயற்சி வீண்போகவில்லை என்று சந்தோஷம் அடைகிறார்கள்.

இந்நிலையில் பார்வதி குடும்பத்தினர்கள் பார்வதியை விட்டு பிரிந்த சோகத்தில் இருக்கிறார்கள். சுந்தரத்திற்கும் உடல் சரியில்லாத நிலையில்கூட தன் மகளை நினைத்து கவலைப்படுகிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அர்ச்சனா தன் வில்லத்தனமான வேலையை செய்து கொண்டுதான் வருகிறார். இந்த வில்லத்தனமான செயல்களுக்கெல்லாம் சந்தியா முற்றுப்புள்ளி வைத்து விடுவார். இதனைத் தொடர்ந்து இனி வரும் எபிசோடுகளில் என்னதான் நடக்க இருக்கும் என்பதை காத்திருந்து பார்ப்போம்.