பணக்கார பெண்ணை மடக்கிய சரவணன் தம்பி ஆதி.! அட, இவர் சந்தியாவின் தோழியாச்சே.!

raja-rani-22
raja-rani-22

விஜய் டிவியில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் எதிர்பாராத பல மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் புதிதாக சில கேரக்டர்களை தற்போது களமிறக்கி உள்ளார்கள்.

தற்போது சரவணனை சிவகாமி ஹனிமூனுக்கு குற்றாலம் போக சொன்ன நிலையில் சரவணன் அதெல்லாம் வேண்டாம் நாங்க அப்புறமா போகிறோம் என்று கூறிவிட்டார். ஏனென்றால் தற்பொழுது சந்தியா கோச்சிங் கிளாஸ்க்கு சென்று கொண்டிருக்கிறார்.

எனவே சந்தியா படிக்க வேண்டும் என்பதற்காக தற்பொழுது ஹனிமூன் வேண்டாம் என்று சரவணன் கூறிவிட்டார். சந்தியா படிப்பதை சிவகாமிக்கு பிடிக்காத காரணத்தினால் சந்தியாவும் நான் படிக்கவில்லை என்று கூறி வருகிறார் ஆனால் சரவணன் உங்களுடைய கனவை நிறைவேற்றுவது தான் என்னுடைய லட்சியம் என்று கூறி வருகிறார்.

எப்பொழுதும் நீங்கள் எப்படியாவது ஐபிஎஸ் ஆகிவிட வேண்டும் என்று நினைத்து வருகிறேன்.  என்று கூறி சிவகாமிக்கு தெரியாமல் கோச்சிங் கிளாஸ் அனுப்பி வைத்து வருகிறார்.  கோச்சிங் கிளாஸ்சில் புதிதாக ஒரு பெண் வருகிறார்.அந்த பெண்ணிடம் சந்தியா உங்களுடைய கனவு என்ன என்று கேட்டதற்கு எனது கனவு எல்லாம் எதுவும் கிடையாது என்றும் டைம் பாஸ்க்கு வருகிறேன் என்று கூறி சந்தியாவிடம் நெருங்கி பழகுகிறார்.

மேலும் அந்தப் பெண்ணிற்கு பிறந்த நாள் இதன் காரணமாக சரவணனின் தம்பியான ஆதி அந்த பெண்ணிற்க்கு பொக்கே கொடுத்து நடனமாடுகிறார்.  அப்பொழுது தான் தெரிகிறது ஆதி மற்றும் அந்த பெண் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பது அந்தப் பெண் பணக்கார வீட்டுப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தற்போது வெளிவந்த ப்ரோமோவில் இதுதான் வெளியாகியுள்ளது.