சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது அந்த வகையில் சமீபகாலமாக சினிமாவிற்கு இணையாக பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சின்னத்திரை தொலைக்காட்சி நிறுவனங்கள். சண்டை காட்சிகள், காதல் காட்சிகள் , ரொமான்ஸ் என படத்திற்கு இணையாக சீரியல்களில் வைக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட ஒரு சீரியல் தான் ராஜா ராணி 2இந்த சீரியலில் தன்னுடைய மனைவியின் கனவை தூக்கி சுமந்து கொண்டு செல்கிறார் சரவணன். எப்படியாவது தனது மனைவியின் கனவை நிறைவேற்ற வேண்டுமென சரவணன் போராடுகிறார் அதனால் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறார்.
ஏனென்றால் சரவணனின் அம்மா சிவகாமி சம்மதத்துடன் தான் சந்தியாவின் கனவை நிறைவேற்ற நினைக்கிறார் ஆனால் சிவகாமி இதற்கு கொஞ்சம் கூட ஒதுக்கவில்லை அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மருமகள் சந்தியாவிடம் நாசுக்காக பேசி முதலில் இந்த குடும்பத்திற்கு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டு அதன் பிறகு உன்னுடைய கனவை நிறைவேற்ற கிளம்பு என கூறி விடுகிறார்.
அதனால் சந்தியாவும் மாமியாரின் ஆசை ஆவது நிறைவேற்றலாம் என்று நல்ல மருமகளாக இருக்க வேண்டும் என நினைத்து தன்னுடைய மனதில் இருக்கும் போலீஸ் கனவை அடியோடு புதைத்து விட்டு தலையில் மல்லிகை பூவை வைத்துகொண்டு சரவணனிடம் நெருங்குகிறார். இருப்பினும் இது எல்லாம் நடிப்பு என சரவணன் கண்டுபிடிக்கிறான் அதனால் அதையும் சமாளித்துவருகிறார்.
சந்தியா தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என விடாபிடியாக சரவணனை அணைத்து முத்தமிடுகிறார் ஆனால் சரவணனுக்கு இதில் உடன்பாடு இல்லை அத்துடன் தன்னுடைய அம்மா தான் சந்தியாவிடம் எதையோ கூறிவிட்டார் என உணர்ந்து அதையும் கேட்கிறார். ஆனால் மாமியாரை எதற்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது என சந்தியா இந்த வீட்டிற்கு குழந்தை பெற்று தர விரும்புகிறேன் எனக்கூறி மீண்டும் பேசி சமாளித்து விடுகிறார்.
சந்தியா பெட்ரூமில் அவரின் அப்பா அம்மா ஃபோட்டோ இருந்தால் அவருக்கு இந்த சிறுவயது கனவை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் வரும் என அவரின் அப்பா அம்மா புகைப்படத்தை எடுத்து சென்று விடுகிறார் சிவகாமி. இப்படி சீரியல் விருவிருப்பாக போய்க்கொண்டிருக்கிறது அடிக்கடி சந்தியாவை பற்றி பேசும் மாமியார் தனது குடும்ப பொறுப்பை மொத்தத்தையும் சந்தியாவிடம் கொடுத்து அவருடைய கனவை குழி தோண்டி புதைக்க நினைக்கிறார்.
ஆனால் சரவணன் எப்படியாவது தனது மனைவியை போலீஸ் அதிகாரியாக மாற்ற நினைத்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறார் அதனால் இனி வரும் நாட்களில் சரவணன் அதிரடி எடுக்கப் போகிறார் என தெரிகிறது.