ராஜா ராணி சீரியல் புது சந்தியாவா இது.? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

reeya 1
reeya 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில்  முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் கதாநாயகனாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சித்து நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் விடைபெற்றார் பிறகு தற்போது சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்ற மாடல் அறிமுகமாகியுள்ளார்.

நடிகை ரியாவிற்கு இதுவே முதல் சீரியல் ஆகும். இருந்தாலும் ரியா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார் எனவே ரசிகர்கள் பலர் ரியாவை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக சோசியல் மீடியாவில் தேடி வருகிறார்கள்.

மற்ற நடிகைகளைப் போலவே இவரும் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை  பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள்.  ஏனென்றால் தற்பொழுது சீரியலில் நடித்து வரும்  ரியாவிற்கும் இந்த புகைப்படத்திற்கு சம்பந்தம் இல்லாதது போல் தெரிகிறது.

மிகவும் அழகாக சின்ன பொண்போல் கியூட்டா சரியில் இருக்கிறார் அதுவும் முக்கியமாக கருப்புநிற சரி இவருக்கு மிகவும் பக்காவாக பொருந்தி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வைக்கிறது. இதோ அந்த புகைப்படம்.

reeya 2
reeya 2