விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றே மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பேராதரவை கிடைத்து வருகிறது. தற்பொழுது ராஜா ராணி 2 ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சீசன் நிறைவடைந்தது.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதால் தற்பொழுது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தற்போது டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகி சந்தியா தன்னுடைய சின்ன வயதில் இருந்து ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் பல போராட்டங்களை சந்தித்து வருகிறார் இவ்வாறு ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தை சித்து நடித்து வருகிறார் மேலும் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ரியா என்பவர் நடித்து வருகிறார். தற்பொழுது சந்தியா போலீசாக வேண்டும் என்பதற்காக சரவணன் போராடி வருகிறார். இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அர்ச்சனா சமீபத்தில் விலகி உள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அர்ச்சனா கதாபாத்திரத்தில் வேறு ஒரு சீரியல் நடிகையின் நடித்து வருகிறார். தற்பொழுது இந்த சீரியலில் ஆதி ஜெசி என்ற பெண்ணை காதலித்த கர்ப்பமாகி ஏமாற்றியுள்ள நிலையில் அனைவருக்கும் உண்மையை தெரிவிக்கும் வகையில் சந்தியா பல முயற்சிகளை செய்து வருகிறார் மேலும் ஜெசி தன்னுடைய பெற்றோர்களுடன் புகார் அளிப்பதற்காக சென்றார் அதனை வேண்டாம் என தடுத்த சந்தியா தற்பொழுது தனது குடும்பத்தினர்களுக்கு உண்மையை தெரிய வைத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியலின் சூட்டிங் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் ஆதி,ஜெசி இருவரும் இருக்கிறார்கள் அந்த காட்சி எடுக்கும் பொழுது ஜெசிக்கு ஸ்டூல் வைத்து இருக்கிறார் அதனை தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதில் பலர் ஜெசி உங்களுடைய திறமைக்கு வேறு சீரியலில் நடித்திருக்க வேண்டும் என கண்டபடி விமர்சித்து வருகிறார்கள்.