புதிய சந்தியாவை அறிமுகப்படுத்திய ராஜா-ராணி- 2 சீரியல்.! வைரலாகும் புரோமோ..

rajarani
rajarani

பிரபல விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி சீசன்2 தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் நடிகர் சித்து ஹீரோவாகவும் ஆலியா மானசா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர்.

ஹீரோயினாக சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா மானசா ஐபிஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவோடு உள்ளவர். ஒரு கட்டத்தில் சந்தியாவின் அண்ணன் திடீரென திருமணம் செய்து வைத்துள்ளார். அதனால் சந்தியாவும் அவரது கனவை மறைத்து குடும்ப பொறுப்புகளை சுமந்து  நல்ல மருமகளாக குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவரது கணவர் சரவணனுக்கு சந்தியாவின் கனவு ஆசை பற்றி தெரிய வந்துள்ளது. சந்தியாவை ஐபிஎஸ் ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சரவணன் அவரது வீட்டில் போராடி வருகின்றார். ஆனால் சரவணனின் அம்மாவிற்கு சந்தியா மேற்கொண்டு படிப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.

இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி.தொடரில் ஆலியா மானசா நிஜத்தில் கர்ப்பமாக இருப்பதால் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்த நடித்து வந்தார். தற்போது ஆலியா 9 மாதம் நிறைவடைந்து நிறைமாத கர்ப்பமாக உள்ளதால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதில் சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்ற பிரபலம் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து புதிய சந்தியாவை அறிமுகப்படுத்தும் வகையில் புரோமோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதோ அந்த புதிய ப்ரோமோ.