ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் வெளியான ஆர்ஆர் ஆர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இந்த படத்தை பார்த்த ஹாலிவுட் பிரபலங்களும் ராஜமௌலியை பாராட்டி வருகின்றனர்.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் பான் இந்தியன் கலாச்சாரத்தை தொடங்கி வைத்த ராஜமௌலி கடைசியாக ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராமன் மற்றும் கொமரம்பீம் ஆகிய இவர்களின் வாழ்க்கை வரலாறை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் ராம்சரண் கல்லூரி சீதாராமன் கதாபாத்திரத்திலும் கொமரம்பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆறும் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் மட்டுமல்லாமல் OTT தளத்திலும் வெளியாகி தொடர்ந்து 14 வாரங்கள் முன்னிலையில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஆர்ஆர் படத்தைப் பார்த்த இந்திய திரைப்பட பிரபலங்களும் ராஜமௌலியை பாராட்டி உள்ளனர். அதேபோல் ஹாலிவுட் பிரபலங்களும் ஆர் ஆர் ஆர் படத்தைப் பார்த்துவிட்டு புகழ்ந்து வருகின்றனர். மேலும் ஹாலிவுட் மூத்த நடிகரான டேனி டேவிட்டோ அவர்கள் இந்த படத்தை பார்த்த மெய் சிலிர்த்ததாக கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் எக்டர் ரைட்டும் இந்த படத்தைப் பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளி உள்ளார். இவர் சமீபத்தில் பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் பார்த்துள்ளதாகவும் இடைவெளியின் போது ரசிகர்கள் அந்த படத்தை பார்த்துவிட்டு ஆரவாரத்துடன் கொண்டாடியது கண்டுள்ளேன் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆர் ஆர் ஆர் படத்தை பார்த்த ஹாலிவுட் பிரபாகங்கள் பலர் ராஜமவுலியை பாராட்டி வருகின்றனர். இதனால் ஆர் ஆர் ஆர் பட குழுவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறி வருகின்றனர்.