Raiza Wilson new look photo: நடிகை ரைசா வில்சன் தமிழ் திரைப்பட நடிகை ஆவார், இவர் விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது.
இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகிய பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு வெளியான தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இப்படி இவர் தொடர்ந்து ரொமான்ஸ் அதிகமுள்ள திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார், அதனால் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார், இவர் தற்போது ஆலிஸ் காதலிக்க யாருமில்லை, ஃபயர், #love ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது பழைய புகைப்படம் தான் ஆனால் இது என்னுடைய ஃபேவரைட் புடவை என கூறியுள்ளார். மேலும் இவர் ஏடாகூடமாக புடவை கட்டியிருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஹாட் சாக்லேட் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் புடவையை இப்படியே கட்டுவீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள், இதுபோல் புடவை கட்டினால் பிஞ்சு மனசு தாங்காது எனவும் கமெண்ட் செய்துள்ளார்கள்.