பொசுங்கிப் போன முகமா இது!! இப்ப சும்மா பளபளன்னு மெருகேறி போயிலருக்கு!! படுக்கையறை செல்பி புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

RAISA 1

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவில் பிரபலமடைந்தும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் பலருக்கு இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அந்த வகையில் இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக தமிழில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் 5 சீசனின் போது வேறு தொகுப்பாளர் அறிமுகம் ஆகுவார் என்று கூறப்படுகிறது. அந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரைசா இவர் மாடலிங் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து இருந்தார்.

அந்த வகையில் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற ரோமேண்டிக் திரைப்படத்தில் நடித்து இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் மிகவும் ஸ்டைலாக அழகாக இருந்த ரைசா சமீபத்தில் அறுவை சிகிச்சைக்காக டாக்டர் ஒருவரை அணுகி அவர் சொன்ன அறிவுரைகளை கேட்காமல் ரைசா செய்த தவறினால் முகம் வீங்கி கண்ணின் பக்கத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. இது ஒரு பெரும் சர்ச்சையாகவே பல நாட்களாக இருந்து வந்தது.

இந்நிலையில் மீண்டும் தன் முகத்தை சரி செய்து பழைய நிலைமைக்கு வந்து மேக்கப் போட்டுக் கொண்டு தனது புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் போட்டு எப்படியோ அந்த காரியத்தை மறச்சிடிங்க என பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

raisa
raisa