மீண்டும் ஃபர்ம்க்கு வந்த ரெய்னா.! இப்படி ஒரு அதிரடியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டிங்க..

suresh-raina
suresh-raina

அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் போட்டியில் சுரேஷ் ரெய்னா தனது அதிரடியான ஆட்டத்தை காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஒருநாள் போட்டி, டி20 கிரிக்கெட் போட்டி, என கிரிக்கெட்டின் உருவம் மாறி மாறி வரும் நிலையில் தற்போது 10 ஓவர் கிரிக்கெட் போட்டி என்ற ஒரு புதிய தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த தொடரில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா டெக்கான் கிளேடியட்டர் அணிக்காக விளையாடினார் சுரேஷ் ரெய்னா. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னா அனைத்து அணிகளாலும் புறக்கணிக்கப்பட்டார். அதனை அடுத்து இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக சுரேஷ் ரெய்னா அறிக்கையை வெளியிட்டிருந்த நேரத்தில் சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்து லெஜன்ட் கிரிக்கெட்டில் களம் இறங்கினார் சுரேஷ் ரெய்னா.

தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 போட்டியில் ரெய்னா களமிறங்கினார் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அறிமுகமான ரெய்னா ரன்கள் அடிக்காமல் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த நியூயார்க் ஸ்ட்ரைக்கர் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் தன்னுடைய திறமையான ஆட்டத்தை வெளி காட்டினார் சுரேஷ் ரெய்னா.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த டெக்கான் அணியின் வீரர் ஜேசன் ராய் 5 ரன்களிலும், நிக்கோலஸ் பூரான் 7 ரன்களிலும், காட்மோர் டேக்கவுட் ஆகி வெளியேறினார். 19 ரன்கள் அடித்து மூன்று விக்கெட் இழப்பிற்கு டெக்கான் அணி தடுமாறிய நிலையில் அப்போது களமிறங்கிய சுரேஷ் ரெய்னா தனது அதிரடியான ஆட்டத்தை ஆடி 19 பந்துகளில் 28 ரன்கள் அடித்தார். அதன் காரணமாக 10 ஓவரில் டெக்கான் அணி 109 ரன்கள் அடித்து குவித்தது.