Raichal Rabecca Good night actress : சமீப காலமாக ஒரு தலை காதலர்களால் பல விபரீதங்கள் நடைபெற்று வருகின்றன பல பெண்களின் வாழ்க்கையை ஒரு தல காதலர்கள் சீரழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த அவல நிலை குட்நைட் பட நடிகைக்கும் நடந்துள்ளது. குட் நைட் திரைப்படத்தில் நடித்தவர் ரேச்சல் ரெபேக்கா இவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும் சோகங்களும் அதிகம் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னை ஒரு தலையாக பிரபல நபர் ஒருவர் காதலித்து வந்தார் அவரால்தான் உடலில் 16 வெட்டுக்கள் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளதாக கூறியுள்ளார். ரேச்சல் ரெபேக்கா என்றால் பலருக்கும் தெரியாது ஆனால் சமூக வலைதள பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ பண்ணவர்களுக்கு இவரை நன்றாக தெரியும்.
இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் ஆயுர்வேத மருத்துவர் சமூக ஆர்வலர் ஆவார் அது மட்டுமில்லாமல் இவர் சினிமாவில் கடைசி விவசாயி என்ற திரைப்படத்தில் மாஜிஸ்திரேட்டாக இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது அது மட்டும் இல்லாமல் குட் நைட் திரைப்படத்தில் மணிகண்டனின் அக்காவாக நடித்திருந்தார் எதார்த்தமான நடிப்பு பக்கத்து வீட்டுப் பெண் போல் பார்ப்பதற்கு இருந்ததால் இவரை ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்து விட்டது.
இவரின் கதையை கேட்டால் கண்ணீரை வரவழைக்கிறது ஆம் 2008 ஆம் ஆண்டில் கல்லூரியில் முதல் வருடத்தில் படித்துக் கொண்டு இருந்தார் சின்ன வயதில் இருந்து மருத்துவராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது அதற்கு காரணம் அவருடைய அப்பா தான் பலமுறை மருத்துவர்களை சந்திப்பார் அப்பொழுது இவரையும் அழைத்து சென்றதால் இவருக்கு அந்த ஆசை வந்தது. அதிலும் ஆயுர்வேத மருத்துவம் தான் படிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தார் அதேபோல் படித்து வந்தார்.
அந்த சமயத்தில் ஒருவன் ஒருதலையாக காதலிப்பதாக இவர் பின்னாடியே சுற்றிவந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இவருக்கு காதல் மேல் அவ்வளவு நம்பிக்கை இல்லை அதனால் படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தி வந்தார். அந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது ஒருமுறை ஹாலிங் பெல் அடித்த சவுண்டு கேட்டு கதவை திறந்து பார்த்தபொழுது ஒருதலையாக காதலித்த அந்த நபர் தன் கையில் இருந்த போனை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
அவன் ஓடும் பொழுது இந்த போன் வேண்டுமென்றால் நான் சொல்லும் இடத்திற்கு வரவேண்டும் என கூறி சென்றான் அப்பொழுது தற்கொலை செய்து கொள்ள கூட நான் முயற்சி செய்தேன். ஆனால் ஒரு சமயத்தில் அது தவறான செயல் நாம் என்ன தப்பு செய்தோம் என விழித்துக் கொண்டேன் உடனே அப்பா வந்ததும் அவரிடம் நடந்து அனைத்தையும் கூறினேன் அப்பாவும் அவனை உள்ளே தள்ளிவிட்டு கதவை லாக் பண்ணி விட்டு நீ வெளியே வர வேண்டிதானே என கூறினார்.
பிறகு சில நாட்கள் கழித்து அம்மாவும் நானும் வீட்டில் தனியாக இருந்த பொழுது மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்டது அப்பொழுது நின்று கொண்டிருந்த எங்கள் அம்மா கதவைத் திறந்து பார்த்தார் அப்பொழுது அந்த நபர் அவனை திட்டி தீர்த்தார் ஆனால் அவன் கையில் வைத்திருந்த துருப்பிடித்த கத்தியால் சரமாரியாக தாக்கினார் அப்பொழுது என் வயிற்றுப் பகுதியில் வெட்டு விழுந்து விட்டது என் உடலில் 16 இடங்களில் வெட்டப்பட்டது வயிற்றில் வெட்டப்பட்டதால் குடல் வெட்டுப்பட்டு விட்டது காலையில் சாப்பிட்ட தோசை கூட வெளியே வந்து விட்டது.
துணிவு படத்தை விட பவர்ஃபுல்லான கதையில் நடிக்கும் அஜித்.! சொன்னது யார் தெரியுமா.? குஷியில் ரசிகர்கள்
உடனே எங்க அம்மா பக்கத்தில் உள்ள நபர்களை அழைத்து ஹாஸ்பிட்டலில் சேர்த்தார்கள் நான் ட்ரைனிங் சென்ற ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார்கள் ஆனால் அங்கு ட்ரீட்மென்ட் பார்க்க முடியாது வெட்டு ஆழமாக விழுந்துள்ளதால் வேறு ஹாஸ்பிடல் போக சொன்னார்கள் அப்பொழுது எனக்கு ரத்தம் அதிகமாக ஓடிவிட்டது பல சமூக ஆர்வலர்கள் எனக்கு ரத்தம் கொடுத்தார்கள் அதன் பிறகு சிறிது காலம் கழித்து தான் கண்விழித்து பார்த்தேன் அதன் பிறகு தான் நான் சாதிக்கணும் என்று நினைத்தேன் பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
பலரின் ரத்தத்தில் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அதனால் பலருக்கு நான் உதவி செய்ய வேண்டும் என முயற்சி செய்து பல உதவிகளை செய்து வருகிறேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.