த்ரிஷா அமலாபாலை தொடர்ந்து கௌரவிக்கப்பட்ட ராய் லட்சுமி..! இந்த லிஸ்ட்ல நயன்தாரா கூட இல்லையே..!

rai-lakshmi-2
rai-lakshmi-2

தமிழ் மொழி மட்டுமின்றி இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து கதாநாயகியாக வலம் வந்தவர் தான்நடிகை ராய் லட்சுமி.இவ்வாறு பிரபலமானவர் நடிகை தமிழ் சினிமாவில் காஞ்சனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி அவரை கவுரவித்து உள்ளது இவ்வாறு வெளிவந்த தகவலானது சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது தாறுமாறாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அரண்மனை காஞ்சனா மங்காத்தா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகைக்கு திடீர் என தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். பின்னர் வெகு வருடம் கழித்து  தமிழில் சின்ரெல்லா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதுவரை வெளிவந்த இந்தத் திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ஒரு திரில்லர் திரைப்படம் ஆகும்.அந்த வகையில் இந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களால் மீண்டும் ராய்லட்சுமி கவனிக்கப்பட ஆரம்பித்தார்.

இந்நிலையில் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக நடிகை ராய் லட்சுமி துபாய்க்கு செல்வது வழக்கம் தான் அந்த வகையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் இவரது கோல்டன் விசாவை வழங்கிக் கௌரவித்துள்ளது.  தொடர்ந்து இந்த நாட்டிற்கு ராய்லட்சுமி நன்றி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இப்படி ஒரு வீசாவை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், சஞ்சய் தத், மற்றும் போனிகபூர் ஆகியோர்கள் மற்றுமே பெற்றுள்ளார்கள். அதேபோல மலையாள சினிமாவில் மம்முட்டி துல்கர் சல்மான் மோகன்லால் டோவினோ தாமஸ்  மீரா ஜாஸ்மின் ஆகியோர்கள் பெற்றுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களான பார்த்திபன் நடிகை திரிஷா, அமலா பால் இவர்களை தொடர்ந்து தற்போது ராய் லட்சுமிக்கு இப்படி ஒரு கவுரவம் கிடைத்தது ரசிகர்களுக்கு வியக்கத்தக்க விஷயமாக அமைந்தது மட்டுமல்லாமல் இதனை பலரும் கொண்டாடி வருகிறார்கள்.

rai-lakshmi-2
rai-lakshmi-2