திருமணத்திற்கு முன்பே காதலருடன் லூட்டி அடிக்கும் ராகுல் பிரீத் சிங்.! வைரலாகும் புகைப்படங்கள்

rakul-preet-singh

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் மகேஷ்பாபு, ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழில் தற்போது கமல் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலன் திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

19 வயதில் கன்னட சினிமாவில் அறிமுகமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்திற்காக இரண்டு கோடி சம்பளம் வாங்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலர் ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரித்து வரும் டாக்டர் ஜி மருத்துவ பெண்ணாக நடித்து வருகிறார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஜாக்கி என்பவரை காதலித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் பல இடங்களில் ஜோடியாக சுற்றி வருகின்றனர். மேலும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அக்டோபர் 10ஆம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு காதலருடன் லண்டனில் செம பார்ட்டி கொடுத்து கொண்டாடி வருகிறார்.

rakul preet singh
rakul preet singh

அந்த கொண்டாட்டத்தில் பூமி பெட்நேக்கர், அர்ஜுன் கபூர் மற்றும் டினோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது காதல் குறித்து பேசி உள்ள நடிகை ராகுல் ப்ரீத் சிங் எனது வாழ்க்கையை இரண்டு வழிகளில்  பிரிக்க விருப்பமில்லை. சிலர் தங்களுடைய காதலை வெளிப்படையாக கூறாமல் இருக்கிறார்கள்.அதுபோல நான் இருக்க மாட்டேன் கேமராவுக்கு முன் நடிப்பது ஒன்றும் தப்பு கிடையாது ஆனால் நிஜ வாழ்க்கையில் என்னால் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.

rakul preet singh